ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு திட்டம், என்.எஃப்.எஸ்.ஏ இன் கீழ் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மானியமிக்க உணவு தானியங்களை விநியோகிக்கிறது. இதன் மூலம் அதிகாரப்பூர்வ செயலியும் வெளியிட்டப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது. வாழ்வாதாரத்திற்காக புதிய இடங்களுக்குச் செல்லும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு உதவும் இந்த புதிய மொபைல் ஆப் தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கிடைக்கிறது. ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு அமைப்பானது நாட்டில் சுமார் 69 கோடி பயனாளிகளை உள்ளடக்கியது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ONORC தொடர்பான சேவைகளிலிருந்து பயனடைய உதவும் வகையில் புதிய மேரா ரேஷன் மொபைல் ஆப் பயன்படுத்தலாம். மேலும் வேலை நிமித்தமாக வெளியூர்களுக்குச் செல்வோரும் கூட இந்த செயலி மூலம் அப்டேட் செய்து தங்களுக்கான உணவுகளை தங்கியிருக்கும் இடத்திலேயே பெறலாம். இந்த ஆப்பின் மூலம், பயனாளிகள் அருகிலுள்ள நியாய விலைக் கடையை அடையாளம் காணவும், அவர்களின் உரிமை மற்றும் சமீபத்திய பரிவர்த்தனைகளின் விவரங்களை சரிபார்க்கவும் முடியும். கூகுள் பிளே ஸ்டோரில் Mera Ration என்று டைப் செய்து இந்தச் செயலியைப் பெறலாம். பின்னர் உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள பதிவு எண்ணைக் கொண்டு செயலியில் கணக்குத் துவங்கலாம். இனி உங்கள் ரேஷன் கார்டு உங்கள் கைகளில்.
The post மேரா ரேஷன்! appeared first on Dinakaran.