சென்னை: பொதுமக்களின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, சென்னை நகரப் பகுதியில் உள்ள சில தபால் நிலையங்களுக்கு அஞ்சல் துறை விரைவில் புதிய கட்டிடங்களைக் கட்டவுள்ளது. தபால் நிலையங்களின் தோற்றத்தை மேம்படுத்தும் முயற்சியில் சொந்த மற்றும் வாடகை வளாகத்தில் செயல்படும் தபால் நிலையங்களையும் அஞ்சல் துறை நவீனமயமாக்கியுள்ளது.
தமிழ்நாடு வட்டத்தில் உள்ள 94 அலுவலகங்களில், புதுச்சேரியின் லாஸ்பேட்டை மற்றும் வில்லியனூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஹாசனம்பேட்டை, செங்கல்பட்டு கோட்டத்தில் சிங்கபெருமாள்கோயில் மற்றும் சென்னையில் நுங்கம்பாக்கம் மற்றும் தாம்பரம் கிழக்கு உட்பட 22 அலுவலகங்கள் இந்த திட்டத்தில் புதுப்பிக்கப்படவுள்ளதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை நகரப் பிராந்தியத்தின் அஞ்சல் துறைத் தலைவர் ஜி.நடராஜன் கூறுகையில், தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், வேகமாக வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய புதிய கிளை அலுவலகங்களைத் திறப்பதிலும் துறை கவனம் செலுத்தியுள்ளது.தற்போது கீழ்ப்பாக்கம் தபால் நிலையத்தின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, ஆர்ம்ஸ் சாலையில் புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது. ஒரு வாரத்தில் அதற்கு டெண்டர் கோரப்படும். மேலும், முகப்பேர், நக்கீரர் தெரு மூன்றாவது பிளாக்கில் உள்ள முகப்பேர் தபால் அலுவலகம், தற்போது காலியாக உள்ள அதன் சொந்த வளாகத்திற்கு மாற்றப்படும். ரூ.4.76 கோடி மதிப்புள்ள இந்த 2 திட்டங்களும் ஒரு வருடத்தில் நிறைவடையும்.
ஒரு நாளில் குறைந்த நேரம் மட்டுமே செயல்படும் மற்றும் அஞ்சல் செயல்பாடுகளைக் கொண்ட, வானகரம் மற்றும் மப்பேடு போன்ற 7 ஏழு கிளை அஞ்சல் அலுவலகங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. சென்னை, புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய 39 அஞ்சல் அலுவலகங்களில் விநியோக வலையமைப்பை வலுப்படுத்தவும், வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் கிட்டத்தட்ட 62 கூடுதல் அஞ்சல் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post உள்கட்டமைப்புகளை மேம்படுத்திசென்னை தபால் நிலையங்களை புதுப்பிக்க நடவடிக்கை: அஞ்சல் துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.