மேயர் பதவியை துறந்தார்... வார்டு மக்களை மறந்தார்..? - கோவை முன்னாள் மேயர் கல்பனாவை சுற்றும் சர்ச்சைகள்

4 weeks ago 6

திமுக தலைமைக்கு ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, 2024 மக்களவைத் தேர்தல் முடிந்த சூட்டோடு கோவையின் முதல் பெண் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், மேயராக இருந்தபோது தனது வார்டு மக்களை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்ட கல்பனா, மேயர் பதவி ராஜினாமாவுக்குப் பிறகு வார்டு மக்களை கண்டும் காணாது ஒதுங்கிவிட்டதாக சர்ச்சை வெடித்திருக்கிறது.

கோவை மாநக​ராட்​சி​யின் 100 வார்​டு​களில் 96 வார்​டு​களை திமுக-​வும் அதன் கூட்​ட​ணிக் கட்​சிகளும் வசப்​படுத்தி வைத்​திருக்​கின்​றன. மேயர் பதவி இம்​முறை பெண்​களுக்கு ஒதுக்​கப்​பட்​ட​தால் திமுக முக்​கிய நிர்​வாகி​கள் பலரும் தங்​களது மனை​வி​யரை வார்டு கவுன்​சிலருக்கு நிறுத்தி ஜெயிக்க வைத்​திருந்​தார்​கள். இதனால், யாருக்கு மேயர் யோகம் அடிக்​குமோ என்ற எதிர்​பார்ப்பு திமுக-​வினர் மத்​தி​யில் இருந்​தது.

Read Entire Article