அறந்தாங்கி, அக்.10: அறந்தாங்கி அடுத்த மீமிசலில் ஐக்கிய வர்த்தக சங்கம் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் அபூபக்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில் வரும் ஆயுத பூஜை பண்டிகைக்கு கடைகளைத் திறந்து வைத்திருப்பது, தீபாவளி பண்டிகை முடிந்து அனைத்து வியாபாரிகளுக்கும் அடையாள அட்டை வழங்குவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஐக்கிய வர்த்த சங்கத்தின் சார்பில் உள்ள இடத்தில் கட்டிடம் கட்டுவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்க துணை தலைவர் ஆனந்த், செயலாளர் வன்மீகநாதன், பொருளாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள், வணிகர்கள் கலந்து கொண்டனர்.
The post மேயருக்கு வெள்ளிசெங்அறந்தாங்கி அருகே மீமிசலில் ஐக்கிய வர்த்தக சங்க கூட்டம் appeared first on Dinakaran.