வேலூர், பிப்.26: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பணிபுரியும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ‘பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறத்தல்களை தடுத்தல், தடை செய்தல் மற்றும் தீர்வு காணுதல் சட்டம்-2013’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரோகிணி தேவி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகிளர் அதிகார மைய நிதி கல்வியறிவு நிபுணர் தினேஷ்குமார் கலந்து கொண்டு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10 பேருக்கு மேல் பணியாற்றும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறத்தல்கள் பற்றின செயல்களை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், துணை முதல்வர்(பொறுப்பு)பாஸ்கர், ஆர்எம்ஓ இன்பராஜ், துணைத்தலைவர்கள் மோகன்காந்தி, குமரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
The post பணிபுரியும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது எப்படி? வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் விழிப்புணர்வு appeared first on Dinakaran.