வேலூர், பிப்.26: காட்பாடி காந்தி நகரில் உள்ள மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பாக மின்வாரிய தொழிலாளர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்ட செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முரளி தொடக்க உரையாற்றினார். மாநில செயலாளர் கோவிந்தராஜ், திட்ட பொருளாளர் சின்னராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தர்ணாவில் மின்வாரியத்தில் காலியாக உள்ள 60 ஆயிரம் ஆரம்ப கால பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். கேங்மேன் பதவியை கள உதவியாளர் பணியாக மாற்ற வேண்டும். ஊதிய உயர்வு, வேலைப்பளு உள்ளிட்டவை குறித்து உடனே பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
The post மின்வாரிய தொழிலாளர் தர்ணா போராட்டம் காட்பாடி காந்தி நகரில் appeared first on Dinakaran.