மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, பாசனத்துக்கு நீர் மின் நிலையங்கள் வழியாக 22,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடகவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரித்தன் காரணமாக, மேட்டூர் அணைவரலாற்றில் முழு கொள்ளவான 120 அடியை கடந்த ஜூன் 29-ம் தேதி 44வது முறையாக எட்டியது. பின்னர், அணை நீர்மட்டம் சரிந்து மீண்டும் கடந்த ஜூலை 5-ம் தேதி நடப்பாண்டில் 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர், அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது.