திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் விபத்து: சென்னை சென்ட்ரலுக்கு பதில் அரக்கோணத்தில் இருந்து 3 ரயில்கள் புறப்பட உள்ளதாக அறிவிப்பு

6 hours ago 3

சென்னை: திருவள்ளூர் மேல்நிலைப் பள்ளி அருகே ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புறப்பட வேண்டிய 3 ரயில்கள் அரக்கோணத்தில் இருந்தும், ஒரு ரயில் காட்பாடியில் இருந்தும் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்களின் விபரம்:
1. ஜூலை 13, 2025 அன்று இரவு 12.00 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் எண் 12673 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் அரக்கோணத்தில் இருந்து புறப்படும்.

2. ஜூலை 13, 2025 அன்று மாலை 7.30 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் எண் 12623 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் அரக்கோணத்தில் இருந்து புறப்படும்.

3. ஜூலை 13, 2025 அன்று காலை 9.05 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் எண் 12671 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் காட்பாடியில் இருந்து புறப்படும்.

4. ஜூலை 13, 2025 அன்று இரவு 9.15 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் எண் 16021 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – அசோகபுரம் காவேரி எக்ஸ்பிரஸ் அரக்கோணத்தில் இருந்து புறப்படும்.

இந்த ரயில் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் விபத்து: சென்னை சென்ட்ரலுக்கு பதில் அரக்கோணத்தில் இருந்து 3 ரயில்கள் புறப்பட உள்ளதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article