மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

4 months ago 18

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 117.21 அடியாக இருந்தது.  

Read Entire Article