சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக மேட்டுப்பாளையம்-போத்தனூர் இடையிலான மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் செல்லும் மின்சார ரெயில் வருகிற 4 மற்றும் 6-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
அதே தேதிகளில், போத்தனூரில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் மின்சார ரெயில் வருகிற 4 மற்றும் 6-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. அதே தேதிகளில், கோவையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.