சென்னை,
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான இளம் நட்சத்திரங்களில் ஒருவர் விஷ்வக் சென். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களால் பாராட்டப்படும் இவரது நடிப்பில் , கடந்த ஆண்டு கேங்க்ஸ் ஆப் கோதாவரி, ஹாமி மற்றும் மெக்கானிக் ராக்கி ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.
தற்போது இவர் லைலா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், நெதர்லாந்தின் ரோட்டர்டமில் வரும் 9-ம் தேதி வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட 'ஹாமி' திரைப்படம் தேர்வாகி உள்ளது.
வித்யாதர் ககிதா இயக்கிய இந்த படம் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்ற இப்படம், விஷ்வக் சென் கெரியரில் மறக்க முடியாத படமாக அமைந்தது. சாந்தினி சவுத்ரி கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தில் அபிநயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.