மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே விடுமுறை கால சிறப்பு மலை ரயில் இயக்கம்: தென்னக ரயில்வே அறிவிப்பு

4 hours ago 1

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே இம்மாத இறுதி முதல் ஜூலை 7ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே சிறப்பு வாய்ந்த பாரம்பரியமிக்க மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உயரமான மலைமுகடுகள், குகைகள், நீர்வீழ்ச்சிகள், பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வத்துடன் வருகை தருகின்றனர். தற்போது, பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தென்னக ரயில்வே நிர்வாகம் விடுமுறை கால சிறப்பு மலை ரயில் சேவையை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் மார்ச் 28 முதல் ஜூலை 6ம் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து வாரந்தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு புறப்படும் சிறப்பு மலை ரயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடையும். இதேபோல் மறுமார்க்கமாக மார்ச் 29ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை ஊட்டியில் இருந்து வாரந்தோறும் சனி மற்றும் திங்கட்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. விடுமுறை கால சிறப்பு மலை ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே விடுமுறை கால சிறப்பு மலை ரயில் இயக்கம்: தென்னக ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article