கோவை: கோடைகாலத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் மாற்று பயிரான தர்பூசணி சாகுபடியில் அதிகளவு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் தக்காளி, சின்ன வெங்காயம், வாழை, காய்கறிகள், விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக கோடை சீசனில் மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் தர்பூசணி சாகுபடி அதிகளவு செய்யப்பட்டு வருகிறது. இம்முறை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாற்று பயிராக தர்பூசணியை விவசாயிகள் சாகுபடி செய்ய தொடங்கி உள்ளனர்.
வழக்கமான தக்காளி சின்ன வெங்காயம், வாழை சாகுபடிகளை விடுத்து இம்முறை கோடை சீசன் பயிரான தர்பூசணி சாகுபடியில் இறங்கி உள்ளனர். தர்பூசணி 55 நாட்கள் பயிராக ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்யப்படுகிறது. இந்நிலையில் தொண்டாமுத்தூர் வட்டத்தில் யானைகள், காட்டு பன்றி தொல்லை பெரும் பிரச்சனையாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அரசு மானிய விலையில் சோலார் மின்வேலி அமைக்க உதவ வேண்டும் எனவும் விவசாயிகள் விலை பொருட்களுக்கு அரசு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
The post தொண்டாமுத்தூரில் மாற்று பயிராக தர்பூசணி சாகுபடி: பூச்சி தாக்குதல் ஏற்படாமல் கவனமாக பார்த்து வரும் விவசாயிகள் appeared first on Dinakaran.