மேஜர் லீக் கிரிக்கெட்; சாம்பியன் பட்டம் வென்ற எம்.ஐ. நியூயார்க்

4 hours ago 2

டல்லாஸ்,

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (இந்திய நேரப்படி இன்று) நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் வாஷிங்டன் பிரீடம் - எம்.ஐ. நியூயார்க் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த எம்.ஐ. நியூயார்க் 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் எடுத்தது. எம்.ஐ. நியூயார்க் தரப்பில் அதிகபட்சமாக டி காக் 77 ரன் எடுத்தார். தொடர்ந்து 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வாஷிங்டன் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 175 ரன் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 5 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற எம்.ஐ. நியூயார்க் சாம்பியன் பட்டத்தை வென்றது. வாஷிங்டன் தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 70 ரன் எடுத்தார்.

Read Entire Article