
கலிபோர்னியா,
எம்.எல்.சி என அழைக்கப்படும் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (இந்திய நேரப்படி இன்று) நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் எம்.ஐ.நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூயார்க் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தது. நியூயார்க் தரப்பில் அதிகபட்சமாக டி காக் 63 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சான் பிரான்சிஸ்கோ அணி 19.1 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 188 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சான் பிரான்சிஸ்கோ தரப்பில் அதிகபட்சமாக பார்ட்லெட் 59 ரன் எடுத்தார்.
இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட எம்.ஐ. நியூயார்க் இந்த தொடரில் ஆடிய இரு ஆட்டங்களிலும் தோல்வி கண்டு புள்ளிகள் ஏதுமின்றி உள்ளது.