மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ்

6 days ago 6

சென்னை: மேகேதாட்டு அணைக்கு அனுமதி பெற கர்நாடக அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில், தமிழக அரசு அமைதி காக்காமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிய அணை உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா, துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் ஆகியோர் தில்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்திற்கு காவிரி நீர் வருவதை தடுக்கும் நடவடிக்கைகளில் கர்நாடகம் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதைத் தடுப்பதில் தமிழகம் அலட்சியம் காட்டுவது சரியல்ல.

Read Entire Article