1வது வார்டில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்

9 hours ago 2

*துணை மேயர் துவக்கிவைத்தார்

நெல்லை : நெல்லை மாநகராட்சி 1வது வார்டில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் முகாமை துணை மேயர் கே.ஆர். ராஜூ நேற்று துவக்கிவைத்தார்.

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா உத்தரவை அடுத்து மாநகராட்சி நிர்வாகம், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தச்சநல்லூர் மண்டலம் 1வது வார்டு நல்மேய்ப்பர்நகரில் சுற்றித்திரிந்த தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ முகாமை துவக்கிவைத்தார்.

மாநகர்நல அலுவலர் ராணி ஆலோசனையின் பேரில், தெருவில் சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடித்து வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.

நிகழ்வில் கால்நடை பராமரிப்புதுறை மண்டலதுறை விலங்குகள் நல வாரிய மண்டல இயக்குநர் சங்கரநாராயணன், துணை இயக்குநர் சுமதி,. விலங்கு நல வாரிய டாக்டர் ஜெயகிருஷ்ணன் மற்றும் மருத்துவர்கள் சத்யப்ரியா, முகம்மது அப்துல்காதர், சாந்தி, மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் பாலசந்தர், சாகுல்ஹமீது, சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post 1வது வார்டில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article