களக்காட்டில் லோன் தருவதாக கூறி பெண்களிடம் ரூ.12 ஆயிரம் மோசடி

9 hours ago 2

*ஒருவர் கைது, இருவருக்கு வலை

களக்காடு : களக்காட்டில் லோன் பெற்று தருவதாக கூறி ரூ.12 ஆயிரம் பெற்று மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
களக்காடு நகராட்சிக்குட்பட்ட ஆற்றங்கரை தெருவில் சுமார் 50 வீடுகள் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூலி தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்ப்பவர்கள் ஆவர்.

இந்நிலையில் இட்டமொழி அருகேயுள்ள விஜய அச்சம்பாடு, நடுத்தெருவை சேர்ந்த தங்கத்துரை மகன் பொன்ராஜ் (56), மலையடிபுதூரை சேர்ந்த கல்லத்தியான் (42), விஜய அச்சம்பாடு, வேத கோயில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கனகராஜ் (38) ஆகிய 3 பேரும் இப்பகுதியில் உள்ள பெண்களிடம் ஒரு பைனான்ஸ் நிறுவனத்தின் பெயரில் மகளிர் சுய உதவி குழுவிற்கு லோன் தருவதாக பிட் நோட்டீஸ் விநியோகித்து, அதில் ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம் லோன் பெற்று தருவதாகவும் அதற்கு காப்பீட்டு தொகையாக ரூ.920, ரூ.1520 பணம் செலுத்த வேண்டும் என்று கூறி 10 பெண்களிடம் ரூ.12,160ஐ கூகுள் பே மூலம் பெற்றுள்ளனர்.

அதன் பின்னர் தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் களக்காடு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, பெண்களிடம் பணம் பெற்று மோசடி செய்த பொன்ராஜை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கல்லத்தியான், கனகராஜை தேடி
வருகின்றனர்.

The post களக்காட்டில் லோன் தருவதாக கூறி பெண்களிடம் ரூ.12 ஆயிரம் மோசடி appeared first on Dinakaran.

Read Entire Article