மே மாதத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்காளதேச கிரிக்கெட் அணி

5 hours ago 2

டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணி மே மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி (ஏப்ரல் 11 முதல் மே18) முடிந்த பிறகு இந்த தொடர் நடைபெறுகிறது.

இந்த தொடர் பைசலாபாத், முல்தான், லாகூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு வங்காளதேச அணி பாகிஸ்தான் சென்றிருந்தது.

அதற்கு முன் கடந்த வருடம் பாகிஸ்தான் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தது. இரண்டு போட்டிகளிலும் வங்காளதேசம் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article