பெட்ரோல் பங்குகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க கட்டுப்பாடுகள் விதிப்பு - அமைச்சர் எ.வ.வேலு

2 hours ago 2

சென்னை,

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சட்டசபையில் கேள்வி, பதில் நேரத்தில், பெட்ரோல் பங்க் அமைக்க தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கான நெறிமுறைகளை வகுக்க அரசு முன் வருமா என சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, அரசாணை 121 மூலம் வெளியிடப்பட்ட ஆணைப்படி பெட்ரோல் பங்க் அமைக்க தடையில்லா சான்று வழங்கப்படுவதாகவும், மாநில நெடுஞ்சாலைகளில் சாலை சந்திப்பில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு பெட்ரோல் பங்க் அமைக்கலாம் எனவும், மாவட்ட இதர சாலைகளில் சாலை சந்திப்புகளில் இருந்து 100 மீட்டர் தூரம் பெட்ரோல் பங்க் அமைக்க தடை இல்லை சான்றிதழ் வழங்கலாம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், நகரப் பகுதியில் வாகனங்கள் அதிகமாகி வரும் நிலையில் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் தனித்தனியாக வாகனம் வைத்துள்ளதோடு ஸ்பேர் வண்டியும் அதிகம் வைத்துள்ளதால் பெட்ரோல் பங்குகள் மூலம் விபத்துகள் ஏற்படக்கூடாது என்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Read Entire Article