மே மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்

6 hours ago 5

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! நினைத்த காரியத்தை முடித்து காட்டுபவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகதர்களுக்கு;

வேலைக்குச் செல்லும் உத்யோகஸ்தர்கள் வேலைச்சுமை அதிகரித்தாலும் தங்களுக்கு பெரிய பொறுப்பைப் பெற்று பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றையும் பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு;

கலைத்துறையில் இல்லாமல் தங்களை தயாரிப்பாளராக்க பலர் முயற்சிப்பர். தயவுசெய்து சினிமா முன்அனுபவம் இன்றி முதல் போடுவதை தவிர்ப்பது நல்லது. தெரிந்த தொழிலை செய்யுங்கள். இதனால் நஷ்டத்தை தவிர்க்க இயலும்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளின் நீண்டகால கனவான தங்கள் காலிமளையில் வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். குடும்ப நிர்வாகத்தைத் திறம்பட நடத்தி நற்பெயர் பெறுவீர்கள். குடும்பத்திற்குத் தேவையான நவ நாகரிகப் பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள்.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் தங்கள் சக நடிகர்களுடன் பழகும் போது தங்களது பிரச்சினைகளை சொல்லாமல் இருப்பது நல்லது. தேவையற்ற விசமர்சனங்களை தவிர்க்கவும்.

மாணவர்களுக்கு

மருத்துவப் படிப்புக்காக அரசுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற கடினமாக படித்தால்தான் இலக்கை அடைய முடியும்.

பரிகாரம்

பெருமாளை புதன் கிழமை அன்று தரிசிப்பது நல்லது. முடிந்தால் துளசி மாலையை கொடுப்பதும் நல்லது.

மகரம்

மகர ராசி அன்பர்களே!வெளியூர் சென்று வருவதை வழக்கமாக கொண்டவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகதர்களுக்கு; சக ஊழியர்களில் சிலர் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் உங்கள் உயர் அதிகாரிகளின் பேரன்பையும் மதிப்பையும் பெறுவீர்கள். மேலதிகாரிகள் உங்கள் பக்கம் இருந்து அனைத்துவிதத்திலும் தங்களுக்கு உதவியாக இருப்பார்,

வியாபாரிகளுக்கு: கல், மண் மற்றும் இரும்பு வியாபாரிகள் தாங்கள் அதிகமான விற்பனைகளை செய்து நல்ல பணவரவு கிடைக்கும். ஒரு சிலர் பெரிய வீடு என கட்டத்துவங்குவீர்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு

கணவரின் அன்பைப் பரிபூரணமாகப் பெற்று மனமகிழ்வு கொள்வீர்கள். வீட்டினை கலைப் பொருட்களை கொண்டு அலங்கரிப்பீர்கள். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டி அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்வீர்கள்.

'கலைஞர்களுக்கு ; புதுமுகக் கலைஞர்களுக்கு தங்களது திறமையினை முழுமையாக வெளிப்படுத்தி ரசிகர்களின் பேராதரவைப் பெறுவீர்கள். சோர்வு வேண்டாம்.

மாணவர்களுக்கு; தாங்கள் தங்களின் வகுப்பு மாணவர்களுடன் கைகலப்பு உண்டாக்காமல் அதாவது வம்பு, வழக்குகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் நட்புணர்வுடன் பழகி வர முயலுவது தங்களது அது உங்கள் பெற்றோரின் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள உதவும்.

பரிகாரம்

அம்மனுக்கு வெள்ளி கிழமை அன்று மல்லிகை பூச்சரத்தை தரிவிப்பது நல்லது.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே!

யாரிடமும் வெளிப்படையாக பழகுபவர் நீங்கள். மனதில் பட்டதை சொல்லிவிடுபவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் சமாதானமாக செல்வது நல்லது. எவரையும் எளிதாக நினைக்க வேண்டாம் அவர்களிடம் தேவையற்ற பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவு செய்வதற்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வர். முதலில் செலவுகள் அதிகமாக இருந்தாலும் தங்களுக்கு இனி வருங்காலத்தில் அது ஒரு அடித்தளமாக அமைந்துவிடும்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத்தலைவிகள் சிக்கன நடவடிக்கையை எடுப்பீர்கள். இந்த கால கட்டத்தில் தங்களுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படும். ஆதலால், செலவு செய்யும் போது தாங்கள் கவனமாகவும் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துக் கொள்ளுங்கள்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு தாங்கள் நினைத்தப்படியே பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும். பலப் பல படங்கள் ஒப்பந்தம் ஆகும். படத்திற்காக முன் பணம் கிடைக்கப் பெறும்.

மாணவர்களுக்கு

பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கெல்லாம் இன்பச் சுற்றுலாக்களுக்காக தங்கள் கல்வி நிறுவனத்திலிருந்து அழைத்துச் செல்வர். தங்களுக்கு நல்ல அனுபவத்தை தரும்.

பரிகாரம்

அங்காள அம்மனுக்கு முல்லை பூச்சரம் கொடுத்து கும்பிடவும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே! வியாபார தந்திரம் மிக்கவர் நீங்கள். எதிலும் உங்கள் சாதனை மிளிரும்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகதர்களுக்கு

உத்யோகதர்களுக்கு அடிக்கடி தங்களுக்கு அலுவலக வேலை நிமித்தமாக வெளியூர்களுக்குச் செல்ல உத்தரவு வரும். கவலை வேண்டாம் அவ்வாறு செல்வதன் மூலம் தங்களுக்கு பெரிய மனிதர்களின் தொடர்பும் அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். ஏனென்றால், பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டியது வரும். எனவே, கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

குடும்பத் தலைவிகளுக்கு

கைத்தொழிலான டைலரிங், அழகு நிலையங்கள்,பொம்மை தொழில் போன்ற சுயதொழிலை ஆரம்பித்து லாபத்தை ஈட்டுவீர்கள். மாமியார் மருமகள் உறவுகளில் பிரச்சினை ஏற்படும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் தங்கள் உழைப்பினை போட்டால் தாங்கள் அதற்கேற்ற பலன் தாமதமானாலும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லாமல் செயல்படவும் வெற்றி உங்கள் பக்கம்தான்.

மாணவர்களுக்கு

கல்லூரி மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களது சகமாணவர்களுடன் சுற்றுலா செல்லும் போது படகு சவாரி மற்றும் நீர் விளையாட்டுகளில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

பரிகாரம்

மஹா லட்சுமி தாயாருக்கு மாலை வேளையில் நெய்விளக்கு ஏற்றவும்.

**********

கணித்தவர்:

திருமதி. N.ஞானரதம்

Cell 9381090389


Read Entire Article