டெல்லி : மே 7ம் தேதி பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் விவரங்களை ஒன்றிய பாதுகாப்புத் துறை வெளியிடப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹ்லகாமில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாக மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள், குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதோடு, முக்கிய தீவிரவாதிகள் உட்பட 70 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், இந்தியா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட முக்கிய தீவிரவாதிகளின் பெயர்களை ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு..
*லஷ்கர் இ தொய்பா பொறுப்பாளரான முடாசர் காதியன் காஸ் என்ற அபு ஜுண்டல்
(முடாசர் காதியன் இறுதிச்சடங்கில்தான் பாகிஸ்தான் ராணுவத்தினர் பங்கேற்று மரியாதை செய்தனர்)
*ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பொறுப்பாளர் ஹபீஸ் முகமது ஜமீல். இவர் தீவிரவாதி மவுலானா மசூத் அசாரின் மைத்துனர் ஆவார்.
(நிதி திரட்டுவது, இளைஞர்களை மூளைச்சலவை செய்து சேர்ப்பது உள்ளிட்டவை ஜமீலின் முக்கிய பணி)
*ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த முகமது யூசுப் அசார் (எ) உஸ்தாத்
(ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு பயிற்சி தருவது, புகாஷ்மீரில் பல தாக்குதலில் ஈடுபட்டவர் உஸ்தாத்)
*லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி காலித் (எ) அபு ஆகாஷா (காஷ்மீரில் பல்வேறு தாக்குதலில் ஈடுபட்ட காலித், ஆப்கானில் இருந்து ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவர்)
*ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தளபதி முகமது ஹசன்கான்
(காஷ்மீரில் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் முகமது ஹசன் மூளையாக செயல்பட்டவர்)
The post மே 7ம் தேதி பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் விவரங்கள் வெளியீடு!! appeared first on Dinakaran.