மே 5 வணிகர் நாளாக அறிவிக்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

3 hours ago 1

சென்னை,

மதுராந்தகத்தில் நடைபெறும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு;

"* வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து நிரந்தர உறுப்பினர்களாக இருப்போருக்கான உதவித்தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.

* கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்கள் நீடிக்கப்படும்.

* உணவுப் பொருட்கள் விற்பனை தவிர்த்து 500 சதுர அடிக்கு கீழ் உள்ள நிறுவனங்களுக்கு சுய சான்றிதழ் அடிப்படையில் தொழில் உரிமம் வழங்கப்படும்.

* சென்னை மாநகராட்சி நீங்கலாக பிற மாநகராட்சிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் உள்ள பிரச்னைகளை தீர்க்க அமைக்கப்பட்ட வழிகாட்டுக்குழுவைப் போல, சென்னையிலும் பிற நகராட்சிகளிலும் அமைக்கப்படும்.

* மே 5-ம் தேதியை வணிகர் நாளாக அறிவிப்பதற்கான அரசானை விரைவில் வெளியிடப்படும்.

* வர்த்தகர்கள், சிறு வியாபாரிகளுக்கான புதிய இணையதளம் உருவாக்கப்படும். 22 சேவைகளை இதன் மூலம் வணிகர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

* அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் வணிக நிறுவனங்களை திறக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது."

 

Read Entire Article