சென்னை: பிரதமர் மோடி தலைமையில் மே 24-ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.
மத்திய அரசி்ன் நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் உள்ளார். பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக்குழு கூட்டம் நடத்தப்படும்.