
சென்னை,
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான இளநிலை க்யூட் (CUET UG 2025) தேர்வு தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் நடத்தப்படுகிறது. 2025-ம் ஆண்டுக்கான க்யூட் தேர்வு மே 13-ம் தேதி முதல் ஜூன் 3- வரை நடத்தப்பட உள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தாக்குதலினால் தேர்வு ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே 13-ம் தேதி முதல் 16 வரை நடக்கவிருக்கும் தேர்வுகளுக்கான அட்மிட் கார்டு வெளியாகி உள்ளது.
இளநிலை கியூட் தேர்வு 2025 அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?
தேர்வர்கள் https://cuet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
படி 1 : https://cuet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
படி 2 : அதில் முகப்பு பக்கத்தில் Admit Card என்று இடம்பெற்று இருக்கும்.
படி 3 : அதனை கிளிக் செய்யவும். அதில் விண்ணப்ப எண், பாஸ்வார்டு, CAPTCHA ஆகியவை உள்ளிட்டு அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.