'டிடி நெக்ஸ்ட் லெவல்' பட பாடல் சர்ச்சை.. எடப்பாடி பழனிசாமியிடம் ஜனசேனா கட்சியினர் புகார்

5 hours ago 5

சென்னை,

இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 16-ம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் இப்படத்திலிருந்து 'கிஸ்ஸா 47' என்ற பாடல் வெளியானது. அதில் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பாடல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது அங்கு வந்த ஜனசேனா கட்சியினர் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் மீது குற்றச்சாட்டு வைத்தனர். அதாவது, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளதாக அப்படத்தை தடை செய்யவோ அல்லது படத்தில் இருந்து அந்த பாடலை நீக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் திரைப்பட தயாரிப்பாளர் மீது திருமலை காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகார் செய்துள்ளார்.

Read Entire Article