
சென்னை,
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில், பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மலர் போன்று இருந்த பெண்கள்.. கசக்கி வீசப்பட்ட பொள்ளாச்சி வழக்கில் இன்று தீர்ப்பு வந்திருக்கிறது... குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது இந்த வழக்கின் தீர்ப்பு வருங்காலத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கக்கூடாது என்பதற்கு அடித்தளமாக அமையட்டும்... தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கப்படும் கண்கள் பொசுக்கப்படட்டும் பெண்களைத் தவறாக தீண்ட நினைக்கும் கைகள் தீய்ந்து போகட்டும்... பெண்களைத் தவறாக பார்க்கும் எண்ணம் சிதைந்து போகட்டும்.. இந்த தீர்ப்பு பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தீர்த்து வைக்கட்டும்.என தெரிவித்துள்ளார் .