மெரினாவில் தற்கொலைக்கு முயன்ற 2 பெண்களை மீட்ட காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

1 day ago 3

சென்னை: பெற்றோர்க்கு இடையேயான சண்டையினால் மெரினா பகுதி கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற 2 மகள்களை துரிதமாக காப்பாற்றிய காவல் ஆளினர்களை காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார். சென்னை பெருநகர காவல், D-5 மெரினா காவல் நிலைய தலைமைக்காவலர் B.குமரேசன், காவலர் M.சங்கர் குமார் N.முருகன் ஆகிய மூவரும் கடந்த 30.03.2025 அன்று இரவு மெரினா, விவேகானந்தர் இல்லம் எதிர்புறம் உள்ள கடற்கரையில் கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்கு 2 பெண்கள் கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றதை பார்த்ததும், மேற்படி காவலர்கள் மூவரும் விரைந்து சென்று கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற 2 பெண்களையும் மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

விசாரணையில் 2 பெண்களும் அவர்களது தாய் தந்தையருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக, அவர்களது தாயார் தந்தையிடமிருந்து விவகாரத்து கேட்க உள்ளதாக கூறியதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. மீட்கப்பட்ட 2 பெண்களும் விசாரணைக்குப்பின்னர் உறவினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர். மேற்படி சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு, தற்கொலைக்கு முயன்ற 2 பெண்களை காப்பாற்றிய D-5 மெரினா காவல் நிலைய தலைமைக்காவலர் B.குமரேசன், காவலர் சங்கர் குமார், முருகன் ஆகிய மூவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

The post மெரினாவில் தற்கொலைக்கு முயன்ற 2 பெண்களை மீட்ட காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article