மெரினா உயிரிழப்பு: காவல்துறை பதில் அளிக்க உள்துறை செயலர் உத்தரவு

4 months ago 30

சென்னை,

இந்திய விமான படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் முடிவடைந்து 93ஆவது ஆண்டு தொடங்கி உள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழா காலை 11 மணி முதல் மதியம் 1 வரை நடந்தது. இந்த நிகழ்வுக்கு வருவோர் போதிய அளவில் தண்ணீர், குடை, தொப்பி, உணவு, ஸ்னாக்ஸ் உள்ளிட்டவைகளை கொண்டு வருமாறு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிகழ்வை காண 10 லட்சம் பேர் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் வெயில் காரணமாக நேற்று நடந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய 5 பேர் உயிரிழந்தனர். 100 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மெரினா விமான சாகச நிகழ்ச்சி உயிரிழப்புகள் தொடர்பாக தமிழக காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்க உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். அவசர ஆலோசனைக் கூட்டத்தில் விரிவான விளக்கம் கேட்ட நிலையில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Read Entire Article