மும்பைக்கு எதிரான ஆட்டம்: பெங்களூரு அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிப்பு

1 week ago 6

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 67 ரன்களும், ரஜத் படிதார் 64 ரன்களும் அடித்தனர். மும்பை தரப்பில் டிரென்ட் பவுல்ட், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 222 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 209 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 12 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் திலக் வர்மா 56 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் குருனால் பாண்ட்யா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை. இதன் காரணமாக அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதாருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article