மெட்ரோ ரெயில் பணி: அயனாவரம்-குன்னூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

3 days ago 3

சென்னை,

சென்னை அயனாவரம்-குன்னூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வருகிற 30-ந்் தேதி முதல் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

அதன்படி அயனாவரம் வழியாக புளியந்தோப்பு, சென்டிரல், பாரிமுனை செல்லும் அனைத்து வாகனங்களும் குன்னூர் நெடுஞ்சாலையில் இடதுபுறம் திரும்பி டேங்க் பண்ட் சாலை, கிருஷ்ண தாஸ் சாலை, கூக்ஸ் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

அதேபோல் சென்டிரல், பாரிமுனை, சூளை ரவுண்டானா மற்றும் புளியந்தோப்பு வழியாக ஐ.சி.எப்., அயனாவரம் செல்லும் அனைத்து வாகனங்களும் குன்னூர் நெடுஞ்சாலையை பயன்படுத்த எந்தவித தடையும் இல்லை. இதற்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்குமாறு போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். 

Read Entire Article