மெட்ரோ ரெயிலில் பெண் பயணிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்ட நபர் கைது

6 hours ago 2

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரெயில்கள் இயங்கி வருகின்றன. இந்த மெட்ரோ ரெயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளை ஆபாசமாக வீடியோ, புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் உள்ள ஒரு கணக்கில் பதிவிடப்படுவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 27 வயதான இளைஞரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் கர்நாடகாவின் ஹசான் நகரை சேர்ந்த திஹந்த் ஆவார். இந்த இளைஞர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்கு துறையில் (Accounts Dept) பணியாற்றி வந்துள்ளார். அவர் வேலைக்கு மெட்ரோ ரெயிலில் செல்லும்போது அதில் பயணிக்கும் பெண் பயணிகளை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட திஹந்த் இடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  

Read Entire Article