மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்த பிரதமருக்கு நன்றி, ஜி.கே.வாசன் அறிக்கை

3 months ago 18

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதி அளிக்க ஒப்புதல் அளித்து, இதில் ஒன்றிய அரசு, தனது பங்கான ரூ.7,425 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளித்திருப்பது பெரும் பயனுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்களிப்பு சென்னையில் போக்குவரத்தை மேற்கொள்ளும் பயணிகளுக்கு பேருதவியாக அமைகிறது. பிரதமர் மோடி தமிழக மக்களின் நலன், தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் தக்க நேரத்திலே மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி அளிக்க ஒப்புதல் அளித்திருப்பதற்கு நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்த பிரதமருக்கு நன்றி, ஜி.கே.வாசன் அறிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article