பாலக்காடு, மே 14: மூவாற்றுப்புழா அருகே வீட்டிற்குள் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து மேற்கூரை ஓடுகள் சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம், எர்ணாகுளம் மவட்டம் மூவாற்றுப்புழா அருகே கிழக்கு மாராடி செயிண்ட் ஜோர்ஜ் தேவாலயம் பகுதியில் ஜோசப் சாக்கோ என்பவரின் ஓடு வேய்ந்த வீடு அமைந்துள்ளது.
இவரது வீட்டின் சமையல் அறையில் சமையலுக்காக பயன்படுத்தக்கூடிய கியாஸ் சிலிண்டர் மின் இணைப்பு கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்தது. இதில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதன் காரணமாக அக்கம்பக்கத்து வீட்டினர் வீட்டை விட்டு அலறியடித்து வெளியேறி உயிர் தப்பினர். கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு முழுமையாக சேதமடைந்தது. மேற்கூரை ஓடுகள் தீப்பற்றியதால் வெடித்து சிதறின. அப்போது, வீட்டிற்குள் யாரும் இல்லாமல் இருந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
மேலும் ஜோசப் பெற்றோர் மற்றும் 3 பிள்ளைகள் தேவாலயத்திற்கு சென்ற நேரத்தில் விபத்து நேர்ந்துள்ளது. உடனடியாக மூவாற்றுப்புழா தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து காரணமாக மூவாற்றுப்புழா எம்.சி சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மூவாற்றுப்புழா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மூவாற்றுப்புழா அருகே பரபரப்பு: சமையல் அறையில் கியாஸ் சிலிண்டர்; வெடித்ததால் சிதறிய மேற்கூரை ஓடுகள் appeared first on Dinakaran.