சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை - கூடூர், அரக்கோணம் - ஜோலார்பேட்டை மற்றும் சேலம் - கோவை ஆகிய வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தண்டவாளம், சிக்னல் முறைகளை மேம்படுத்துவது, பாலம் அமைத்தல், வேகக் கட்டுபாடுகளை அகற்றுவது உட்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிந்த வழித்தடங்களில் ரயில் வேகத்தை அதிகரித்து, இயக்க அனுமதிக்கப்படுகிறது.