மூன்றாவது டெஸ்டில் ஆர்ச்சர் விளையாடுவாரா...? - பென் ஸ்டோக்ஸ் பதில்

6 hours ago 1

லண்டன்,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக 2 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 10ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் 3வது போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில், 3வது போட்டியிலாவது இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடுவாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இங்கிலாந்து அணிக்காக இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஆர்ச்சர் 42 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இருப்பினும் காயம் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர் விலகி இருந்தார்.

இந்நிலையில் அவர் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதிலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே ஆர்ச்சர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் அவரால் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க முடியவில்லை. இதனால் தான் அவர் மூன்றாவது போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்டில் ஆர்ச்சர் விளையாடுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் கூறியதாவது, எல்லோரும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதைப் பார்த்து, நாம் எடுக்க வேண்டிய முடிவு அது. மேலும், அவரது பணிச்சுமை மற்றும் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு நாங்கள் அவருக்கான வாய்ப்பை கொடுப்போம். எனவே, லார்ட்ஸில் நடைபெறும் போட்டிக்கு அனைவரும் பரிசீலிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article