நடிகர் உன்னி முகுந்தனின் இன்ஸ்டா கணக்கு முடக்கம்!

3 hours ago 1

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். இவர் கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இவரது நடிப்பில் வெளியான 'சீடன்' மற்றும் 'கருடன்' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இவர், தமிழில் நடிகர்கள் சசி குமார், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான 'கருடன்' திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மார்கோ படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக, நடிகர் உன்னி முகுந்தன் அவரது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஹேக் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதைப் பற்றிய தகவல்களை அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் வழியாகதான் தொடர்ந்து தெரிவிப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக நடிகை சுருதிஹாசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்படுவது அதிகரித்துள்ளது. மேலும், நடிகை குஷ்பு மற்றும் இசையமைப்பாளர் டி இமான் ஆகியோரின் எக்ஸ் தளப் பக்கங்களும் ஹேக் செய்யப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article