
நெல்லை,
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் உள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
பணியிடங்கள் விவரம்: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில் உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பிஏ, பிகாம் முடித்தவர்களுக்கும் காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு: 14- வயது நிரம்பியவர்களும் 24 வயது பூர்த்தி அடையாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்; பட்டதாரி பயிற்சி பணியிடங்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் வழங்கப்படும்.
தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 21.7.2025
தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொண்ட பிறகு தேர்வர்கள் விண்ணபிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு அறிவிப்பை படிக்க: https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_20062025_01.pdf