புதுச்சேரி, டிச. 6:புதுச்சேரி வில்லியனூர் அன்னை லூர்து மாதா கோயில் அருகே வில்லியனூர் பெரியபேட் பகுதியை சேர்ந்த வயதான மூதாட்டி ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டு வேலை செய்வதற்காக நடந்து சென்றார். அப்போது அவருடைய காதில் இருந்த கம்மலை மர்ம நபர் ஒருவர் பிடித்து இழுத்து வழிப்பறி செய்தார். அதில் மூதாட்டியின் காது அறுந்து ரத்தக்காயம் ஏற்பட்டது. இதுகுறித்து வில்லியனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக மேற்கு எஸ்பி வம்சித ரெட்டி தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். எஸ்பியின் கிரைம் போலீசார் பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளியை அடையாளம் கண்டனர்.
இதையடுத்து அரியாங்குப்பம் கிரைம் போலீசார் உதவியுடன் நேற்று அந்த நபரை பிடித்து வில்லியனூர் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அரியாங்குப்பத்தை சேர்ந்த திலீப் (22) என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் போதையில் செய்ததாகவும் சரக்கு வாங்க கையில் பணம் இல்லாததாலும் மூதாட்டியிடம் நகை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து திலீபனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே நகை பறிப்பு, வழிப்பறி, கஞ்சா போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post மூதாட்டி காதில் கம்மல் பறித்த இளைஞர் கைது appeared first on Dinakaran.