எம்எல்ஏ நேரில் ஆறுதல் நெல்லை, பிப். 22: மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்த நாங்குநேரி ரூபி மனோகரன் எம்எல்ஏ காயமடைந்த மாணவரை நேரில் பார்த்து நலம் விசாரித்தார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள மூணாறுக்கு கல்வி சுற்றுலா சென்ற போது பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், ஏர்வாடி பேரூராட்சி, திருவரங்கனேரியை சார்ந்த சுதன் என்ற மாணவர் உயிரிழந்தார். திருவரங்கனேரியில் அவரது இல்லத்திற்கு சென்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏர்வாடி 8வது தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முகமது ராஷித் காயமடைந்தார். அவரது இல்லத்திற்கு சென்ற ரூபி மனோகரன் எம்எல்ஏ மாணவரை பார்வையிட்டு அவரது உடல் நலன் குறித்து விசாரித்தார். இந்த விபத்தில் இருந்து மீண்டு, விரைவில் கல்லூரி கல்வியை தொடர வேண்டும் என்றும் மாணவரை ரூபி மனோகரன் எம்எல்ஏ அப் போது கேட்டுக் கொண்டார்.
The post மூணாறு விபத்தில் காயமடைந்த மாணவருக்கு ரூபி மனோகரன் appeared first on Dinakaran.