மூணாறு பகுதியில் தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தும் செந்நாய் கூட்டம்: வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

6 hours ago 4

மூணாறு: மூணாறு பகுதியில் தேயிலை தோட்டங்களில் திரியும் செந்நாய் கூட்டத்தால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காட்டுயானை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இவைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து தொழிலாளர்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில், செந்நாய்களின் கூட்டமும் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தி வருகின்றன.

தேயிலை தோட்டப் பகுதியில் கூட்டம், கூட்டமாக செந்நாய் கூட்டம் திரிவதை சிலர் பார்த்துள்ளனர். கடந்தாண்டு வட்டவடைப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஆடுகளை செந்நாய்க் கூட்டம் தாக்கிக் கொன்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் மூணாறு வனத்துறை ஆர்.ஆர்.டி துணை ரேஞ்ச் வனஅதிகாரி ஜெயன் ஜே, சைலன்ட்வேலி எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் திரிந்த செந்நாய் கூட்டத்தை வீடியோ எடுத்துள்ளார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து மூணாறு பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஜெயன் ஜே கூறுகையில், ‘இந்திய செந்நாய், கிழக்கு ஆசிய செந்நாய், சீன செந்நாய் அல்லது தெற்கு செந்நாய் என செந்நாய் நான்குவகையாக உள்ளன. தேயிலை தோட்டங்களில் திரியும் செந்நாய்க் கூட்டம், கிழக்காசியாவை பூர்வீகமாகக் கொண்டவையின் பரிந்துரைக்கப்பட்ட துணையினமாகும். இது அழிந்து வரும் இனத்தை சேர்ந்தவை. பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் நீண்ட தூரம் பயணம் செய்து இங்கு வந்திருக்கலாம்’ என்றார்.

The post மூணாறு பகுதியில் தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தும் செந்நாய் கூட்டம்: வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article