ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளின் மதகுகள் அடைக்கப்பட்டன.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் ரம்பன் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பாக்லிஹார் மற்றும் சலால் அணை நிரம்பி வழிகின்றன. இதனால் வேறுவழியில்லாமல் பாக்லிஹார் மற்றும் சலால் அணை மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் பாக்.கிற்கு செல்லும் சிந்து நதியில் தண்ணீர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
* டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லியில் உள்ள அரசு கட்டிடங்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நீதிமன்றங்கள், வௌிநாட்டு தூதரகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் முக்கிய சந்தைகள், மெட்ரோ உள்பட ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே டெல்லியில் அனைத்து காவல்துறையினரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post மூடிய பாக்லிஹார் அணை திறப்பு சிந்து நதியில் மீண்டும் தண்ணீர் திறந்த இந்தியா appeared first on Dinakaran.