பெங்களூரு: கர்நாடகா முதல்வருக்கு எதிரான மூடா முறைகேடு வழக்கை விசாரித்துவரும் லோக்ஆயுக்தா, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துவிட்டது. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியதற்காக மைசூரு மாநகர வளர்ச்சிக் குழுமம் (மூடா) 14 மனையிடங்களை மாற்று நிலமாக பார்வதிக்கு ஒதுக்கிக் கொடுத்தது. நீதிமன்ற உத்தரவுப்படி, முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன் சுவாமி மற்றும் நிலத்தை விற்ற தேவராஜு ஆகிய நால்வர் மீதும் லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.
இந்நிலையில், லோக்ஆயுக்தா விசாரணை அறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மூடா வழக்கு விசாரணை நாளை (ஜனவரி 27) விசாரணைக்கு வ ர உள்ளதால் நேற்று முன்தினம் அறிக்கையை பித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post மூடா வழக்கில் கர்நாடகா முதல்வருக்கு எதிரான விசாரணை அறிக்கை தாக்கல்: சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணை appeared first on Dinakaran.