சென்னை: சென்னையில் மாநில தேர்தல் ஆணையம் சமீபத்தில் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில், பகுஜன்சமாஜ் கட்சியின் மாநில தலைவரும் வழக்கறிஞருமான பி.ஆனந்தன் பங்கேற்று பேசினார். அவர் கூறுகையில், வாக்குரிமை என்பது முதலில் பட்டா வைத்திருப்பவர்களுக்கும் பட்டம் வைத்திருப்பவர்களுக்கும் மட்டுமே என்றிருந்தது. இதில் 13 சதவீத மக்கள் வாக்களித்து, அதை 100 சதவீத மக்களின் ஆட்சியாக நடப்பதை டாக்டர் அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளாமல், 21 வயது நிரம்பியவர்களுக்கும் வாக்குரிமை என்ற உரிமையை பெற்று தந்துள்ளார். அந்த வாக்குரிமை வயதை பிரதமராக ராஜீவ்காந்தி வந்தபோது, 18 ஆக மாற்றினார். குறிப்பாக, தேர்தல் கமிஷனின் நடைமுறையை பார்க்கும்போது, அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியின் 3 நாட்களுக்கு முன் பரிசோதனைகள், பணப் பரிமாற்றத்தை தீவிரமாக கண்காணிப்பர்.
எனினும், 3வது நாளில் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பறக்கும் படையினர் சென்றுவிடுகின்றனர். ஒருசில கட்சிகள், வாக்காளர்களின் மனநிலை, நிலைமையைப் பயன்படுத்தி, ஒரு வாக்குக்கு ரூ.500 வரை பணம் கொடுத்து, மக்களை 5 ஆண்டுகள் வரை அடிமைகளாகவும் ஏழ்மையுடனும் வறுமையுடனும் வைத்திருக்கிற இம்மக்களின் நிலைமையைப் பயன்படுத்தி, பணம் கொடுத்து, அவர்களுக்கு வாக்குரிமையின் மரியாதை தெரியாமல் செய்கின்றனர். நம் நாட்டில் தேர்தல் முடிவுகளை விரைவில் அறிவிக்க முடியாத நிலை ஏன் உள்ளது? அமெரிக்கா போன்ற நாடுகளில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தினாலும், அன்று மாலையே வாக்குகளை எண்ண ஆரம்பிக்கின்றனர். ஆனால், நம் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்போது, ஏறக்குறைய 45 நாட்களுக்குமல் பாதுகாப்பாக வைத்திருந்த பிறகுதான் தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கைகளை துவங்குகிறது.
டிஜிட்டல் இந்தியா என முன்னேற்றப் பாதையில் போகும்போது, இந்த தேர்தல் முடிவு அறிவிப்பில் தாமதம், இந்தியாவின் முன்னேற்றத்தை கேள்விக்குறி ஆக்குகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு வெளியிடும்போது, ஒரே நாள் தேர்தல், மறுநாள் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் அந்தந்த மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளாகவும் அலுவலர்களாகவும் உள்ளனர். இச்சூழலில் தனிப்படை முறையில் தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு போதிய ஊழியர் பலம் இல்லாமல் போவதால், தேர்தல் பணியில் இருக்கும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் ‘அடுத்து எந்த அரசு வருமோ?’ என்ற அச்சத்தில் பணியாற்றும் அவலநிலை உள்ளது. இதுபோன்ற பல்வேறு இல்லாமைகளை களைந்திட, ஒவ்வொரு தேர்தலையும் ஆணையம் திறம்பட நடத்துவதற்கு, தனது சிறப்புத் தன்மையை தக்கவைக்க வேண்டும்.
தனிப்பட்ட முறையில் தேர்தல் பணிக்கு தனியே புதிய அலுவலர்கள், ஊழியர்களை தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும். அவர்கள் தேர்தல் நடைபெறாத காலங்களில், ஒவ்வொரு மாநிலங்களிலும் கள ஆய்வு நடத்தி, அங்கு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவுர்தல் பணியில் ஈடுபடுபவர்கள், எலெக்ட்ரானிக் வாக்குப்பதிவு சாதனங்களில் எண்ணும் பணியில் உள்ளவர்கள் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு கொள்ளாதவாறு தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், அவர்கள் எந்தவொரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டாலும், தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படும். மேலும், வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். ஏற்கெனவே வாக்குப்பதிவு இயந்திர முறையை அறிமுகப்படுத்திய அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள், மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கே மாறிவிட்டன.
நம் நாட்டில் போலி அரசியல்வாதிகளை கட்டுப்படுத்தவும், ஜனநாயக வாக்குரிமையை பாதுகாக்கவும் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும். மேலும், தேர்தல் நாளில் விடுமுறை அளித்தும் வாக்களிக்காதவர்கள் சரியான காரணம் கூறவில்லை என்றால், அவர்களின் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும். அவர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் உதவிகளை நிறுத்த வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகள் பெறுவதை தடுத்து நிறுத்தவும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன்சமாஜ் கட்சி மாநில தலைவர் பி.ஆனந்தன் வலியுறுத்தினார்.
The post முழு சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலை நியாயமாக, நேர்மையாக ஆணையம் நடத்த வேண்டும்: பகுஜன்சமாஜ் கட்சி வலியுறுத்தல் appeared first on Dinakaran.