முழு கொள்ளளவை எட்டிய பில்லூர் அணை: பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

1 day ago 4

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை தென்மேற்கு பருவமழை காரணமாக அதன் முழு கொள்ளளவான நூறு அடியில் 97 அடி வரை தண்ணீர் நிரம்பியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி பில்லூர் அணையின் நான்கு மதங்களும் திறக்கப்பட்டு வினாடிக்கு 18000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றின் கரை ஓரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

பவானி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லித்துறை மேட்டுப்பாளையம், ஸ்ரீரங்க ராயன் ஓடை, சிறுமுகை, ஆலங்கொம்பு, வச்சினம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து வருகின்றனர்.

 

Read Entire Article