முறைதவறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்ற மனைவி - 3 பேருக்கு ஆயுள் சிறை..

4 months ago 13
கடந்த 2013ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே முறைதவறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரிகை பகுதியை சேர்ந்த சுதா தன்னுடன் பழக்கம் வைத்திருந்த வெங்கடாஜலபதி மற்றும் அவரது நண்பர்கள் ஆஞ்சப்பா, முனியப்பன், சீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து கணவர் பாபுவை முகத்தில் தலையணையால் அழுத்தியும், கழுத்தை இறுக்கியும் கொலை செய்தார். மாரடைப்பால் இறந்துவிட்டார் என சுதா நாடகமாடிய நிலையில், பாபுவின் தம்பி மஞ்சுநாத் புகார் அளித்ததையடுத்து, ஐந்து பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்த நிலையில் 3 பேருக்கு தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
Read Entire Article