முரசொலி செல்வம் மறைவு: கி.வீரமணி இரங்கல்

3 months ago 20

சென்னை: முரசொலி செல்வம் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். சிலந்தி என்ற புனைப்பெயரில் முரசொலியில் எழுதி வந்த ஆற்றல் மிகு எழுத்தாளர், 50 ஆண்டு முரசொலிக்கு தூணாக இருந்தவர். கருத்துரிமைக்காக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூண்டில் நிறுத்தப்பட்டவர், கம்பீரமாக நின்ற துணிச்சல்காரர். பெரிய அளவு விளம்பர வெளிச்சத்துக்கு வராமல் அடக்கமாக, ஆக்கப்பூர்வமாக பணிகளை கடமை உணர்வோடு ஆற்றக் கூடியவர் என உருக்கம் தெரிவித்ததோடு, முதலமைச்சருக்கும், திமுக தோழர்களுக்கும் திராவிட கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார்.

The post முரசொலி செல்வம் மறைவு: கி.வீரமணி இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article