கீழக்கரை, பிப்.26: கீழக்கரையில் சேதமடைந்துள்ள மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகின்றது. கீழக்கரை கிழக்குத் தெரு, கோரங்கார அப்பா பின்புறம் அமைந்துள்ள சிமெண்ட் மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பம் அமைத்து பல வருடங்கள் ஆகிறது. தற்போது அதன் அடிப்பகுதியில் மிக கடுமையாக சேதம் அடைந்து காணப்படுகின்றது.
மேலும் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் துருப்பிடித்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பம் எந்த நேரமும் கீழே முறிந்து விழுந்து விடும் சூழ்நிலை உள்ளது. விபரீதம் அறியாமல் அப்பகுதியிலுள்ள குழந்தைகள் மின் கம்பம் அருகே விளையாடி வருகின்றனர். எனவே அசாம்பாவிதம் ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
The post ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.