விருதுநகர், பிப்.26: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரியில் 26வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. அர்ஜூனா விருது பெற்ற இந்திய ஹாக்கி அணி தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் தர்மராஜன் வரவேற்றார். இந்திய ஹாக்கி அணி தலைவர் பாஸ்கரன் பேசுகையில், மாணவர்கள் தங்களது எண்ணங்களை உயர்ந்த குறிக்கோளாக கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் சோர்ந்து போகாமல் இருக்க வேண்டும் என்றார்.
விழாவில் அர்ஜூனா விருது பெற்ற பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் காது கேளாதோருக்கான பிரிவில் கலந்து கொண்ட முதல் பெண் போட்டியாளர் ஜெர்லின் அனிகா பேசுகையில், மாணவர்கள் முயன்றால் எட்ட முடியாத உயரத்தையும் அடையலாம் என்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் செந்தில் நன்றி கூறினார். விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
The post காமராஜ் பொறியியல் கல்லூரியில் 26வது ஆண்டு விளையாட்டு விழா appeared first on Dinakaran.