முரசொலி செல்வம் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் அஞ்சலி

4 months ago 24

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி மாறனின் சகோதரரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மைத்துனருமான முரசொலி செல்வம் பெங்களூரில் நேற்று காலமானார். அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தொடங்கி பல்வேறு பிரபலங்களும் இன்று (11.10.2024) அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்தியோர் விவரங்கள் பின்வருமாறு: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் , நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைமைக் கழக நிர்வாகிகள், கழகத்தின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் முரசொலி செல்வத்தின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

Read Entire Article